இலங்கைசெய்திகள்

இந்திய மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து கொழும்பில் போராட்டம்!

வடக்கு கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து, கொழும்பிலுள்ள கடற்றொழில் அமைச்சுக்கு முன்பாக இன்று கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அகில இலங்கை மீனவர் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

போராட்டத்தால் அமைச்சுக்கு முன்பாக பதற்றமான சூழல் உருவானதுடன், அமைச்சருடன் கலந்துரையாடல் ஒன்றின் அவசியத்தை ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.

இதனடிப்படையில், ஐந்து பிரதிநிதிகள் கலந்துரையாடுவதற்கு அமைச்சுக்கு அழைக்கப்பட்டனர். அத்துடன் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் வெளியே வந்து போராட்டக் குழுவினருடன் கலந்துரையாடினார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த அமைச்சர்,

“இந்திய மீனவர்களைக் கைதுசெய்யும் நடவடிக்கைகள் ஏற்கனவே இடம்பெற்று வருகின்றன. இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்புக்குள் நுழைவது தற்போது தடுக்கப்பட்டுள்ளது. எல்லை மீறி வரும் இந்திய மீனவர்கள் தற்போது கைதுசெய்யப்படுகின்றனர்” – என்றார்.

Related Articles

Leave a Reply

Back to top button