இலங்கைசெய்திகள்பிரதான செய்திகள்

யாழ்ப்பாணத்தின் சுவையான கடல் உணவுகள் என்னை தன்வசப்படுத்தியுள்ளது-அமெரிக்க தூதுவர்

யாழ்ப்பாணத்தின் சுவையான கடல் உணவுகள் முதல் சிகியாவின் சுவர் ஓவியங்கள் , நுவரெலியாவின் தேயிலை தோட்டங்கள் மற்றும் காலி கடற்கரை வரை இலங்கை என்னை தன்வசப்படுத்தியுள்ளதாக இலங்கைக்கான அலெய்னா பி.டெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க தூதுவர் வெளியிட்டுள்ள பிரியாவிடை செய்தியிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

உண்மையில் இலங்கை ஒரு அற்புதமான நாடாகும். இங்கு தூதுவராக பணியாற்றியமை எனக்கு கிடைத்த கௌரவமாகும். குறிப்பாக பரந்த புன்னகை மற்றும் அன்பாக வரவேற்கும் மக்கள் , என் முற்றத்தில் உள்ள அழகிய நீல நிற மாக்பீஸ் பறவைகள் முதல் கொத்து ரொட்டியின் வாசனை வரை பல விடயங்களை நான் இழக்கப் போகிறேன்.

வர்த்தகத்திலும் , அரசாங்கத்திலும் , சிவில் சமூகத்திலும் மற்றும் எமது அன்றாட வாழ்விலும் காணப்படும் மக்களுக்கும் – மக்களுக்கும் இடையிலான பிணைப்புக்களே எமது உறவை தாங்கி நிற்கின்றன.

எம் அனைவர் மீதும் மிகப் பெரிய பாதிப்புக்களை ஏற்படுத்திய உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் மற்றும் கொவிட்-19 உள்ளிட்ட கடந்த சில ஆண்டுகளின் மிகவும் கடினமான சில தருணங்களை கடந்து செல்லவும் அவை எமக்கு உதவின.

அமெரிக்கா மற்றும் இலங்கை மக்களுக்கிடையே பொதுவான விடயங்கள் அதிகம் உள்ளன. 70 ஆண்டு கால பொதுவான வரலாற்றைக் கொண்டுள்ள ஜனநாயக நாடுகளாக சட்டத்தின் ஆட்சி , அனைவரையும் உள்ளடக்கிய ஆட்சி மற்றும் கருத்து சுதந்திரம் போன்ற அத்தியாவசிய கொள்கைகளை மேம்படுத்தவும் , பாதுகாக்கவும் முயற்சி செய்கின்றோம்.

இலங்கையின் செழிப்பு மற்றும் இறையான்மையை மேம்படுத்துவதற்கும் , தனியார் துறை மற்றும் எமது மக்களுக்கு இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதற்கும் அரசாங்கத்துடன் நெருக்கமான பங்காண்மையுடன் அமெரிக்கா செயற்பட்டுள்ளது.

கடந்த 20 ஆண்டுகளில் இலங்கைக்கு மொத்தம் ஒரு பில்லியன் டொலருக்கும் அதிகமான உதவிகளை அமெரிக்கா வழங்கியுள்ளதுடன் , ஒத்துழைப்பிற்கான புதிய விடய பரப்புக்களையும் நாம் தொடர்ந்து இணங்காண்கின்றோம்.

கொவிட்-19 பெருந்தொற்றின் போதான சவாலான காலங்களில் நாம் தாராளமான பங்குதாரராக இருந்தோம்.

இலங்கை மக்களுக்கு எவ்வித செலவுகளும் இல்லாமல் நன்கொடையாக வழங்கப்பட்ட 2.4 மில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசிகளுக்கு மேலதிகமாக , கொவிட் தொற்றுக்கு எதிரான போராட்டத்திற்கு உதவுவதற்காக அமெரிக்கா இலங்கைக்கு சுமார் 18 மில்லியன் டொலர்களை வழங்கியுள்ளது.

இந்த பொதுவான இலக்குகள் மற்றும் முதலீடுகள் அனைத்திற்கும் சில சமயங்களின் நாம் உடன்படுவதில்லை. எனினும் தொடர்ந்து பேசுவதும் , எத்தகைய சவால்களுக்கு மத்தியிலும் ஒன்றாக செயற்படுவதும் இராஜதந்திர சாராம்சமாகும்.

இரு தரப்பு உறவை ஒரு நல்ல பயணப்பாதையில் வைத்திருப்பதற்கு எமக்கு அந்த திறந்த தொடர்பாடல் மற்றும் உடன்பாடு இல்லாத பரப்புக்களில் பணியாற்றும் திறன் என்பன அவசியமாகும்.

எமது இரு ஜனநாயக நாடுகளின் பங்கான்மையை மிக நீண்ட எதிர்காலத்திற்கு விரிவுபடுத்துவோம். அதில் எனக்கு எவ்வித சந்தேகமும் இல்லை.

இத்தீவின் இயற்கை அழகு, கலாசாரம் , உணவு மற்றும் நிச்சயமாக அதன் மக்களாகிய உங்களுடனான எனது அனுபவங்களை நான் குறிப்பிடவில்லை எனின் , இலங்கையில் எனது பதவி காலம் முழுமையடையாது.

யாழ்ப்பாணத்தின் சுவையான கடல் உணவுகள் முதல் சிகியாவின் சுவர் ஓவியங்கள் , நுவரெலியாவின் தேயிலை தோட்டங்கள் மற்றும் காலி கடற்கரை வரை இலங்கை என்னை தன்வசப்படுத்தியுள்ளது.

இலங்கை மக்களின் இதமான அன்று மற்றும் தாராள மனப்பான்மை எப்போதும் என் நினைவிலிருக்கும். அதற்கு என்றும் நன்றியுடன் இருப்பேன் என்று தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button