ஸ்வீடனில் வீதிகளில் இருக்கும் சிகரெட் துண்டுகளை எடுத்து வருவதற்கு காகங்களுக்கு ஸ்வீடன் நிறுவனமொன்றினால் பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றது.
ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் 2 பில்லியன் டன்களுக்கும் அதிகமான கழிவுகள் சூழலுக்கு விடுவிக்கப்படுகின்றதுடன், அதில் சிகரெட் துண்டுகளும் பங்களிப்பு வகிக்கின்றது.
இந்நிலையில், வீசப்படும் சிகரெட் துண்டுகளை கொண்டு வருவதற்கும், அவற்றை உரிய முறையில் வீசுவதற்கும் காகங்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றது.
இந்த செயலுக்காக அவற்றுக்கு நிலக்கடலை பரிசாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறைந்த விலையில் தெருக்களை தூய்மைப்படுத்தும் நோக்கில் கார்விட் க்ளீனிங் என்ற நிறுவனம் இம்முயற்சியை எடுத்துள்ளது.
அதிகரிக்கும் சிகரெட் கழிவுகள் சார்ந்த சிக்கலை சமாளிப்பதற்கும், தெருக்களில் வீசப்பட்ட சிகரெட் துண்டுகளை சேகரிப்பதற்கும் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த பயிற்சியானது ஒரு படிப்படியான செயல்முறையாக இருக்கும், அத்துடன், காகங்களுக்கு முழுமையான பயிற்சி அளிக்க்பபட்டதன் பின்னர் அவை இந்த பணியை ஆரப்பிக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.