கொழும்பில் உள்ள சுவிட்ஸர்லாந்து தூதரக அதிகாரியான கானியா பெனிஸ்டர் பிரான்ஸிஸ்க்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கினை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு நீதிமன்றம் திகதியிட்டுள்ளது.
வெள்ளை வேன் ஒன்றில் கடத்தப்பட்டு தாம் முறைக்கேடாக நடத்தப்பட்டதாக கானியா பெனிஸ்டர் பிரான்ஸிஸ் போலி முறைப்பாடளித்தமைக்கு எதிராக குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு மேல் நீதிமன்றில், நீதிபதி நாமல் பலல்லே முன்னிலையில் இன்றைய தினம் எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதற்கமைய, குறித்த வழக்கினை எதிர்வரும் ஆகஸ்ட் 5 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்து கொள்வதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 25 ஆம் திகதி கறுவாத்தோட்டம் பகுதியில் வெள்ளை வேன் ஒன்றில் பிரவேசித்த 5 பேர் கொண்ட குழுவினர் தம்மை முறைக்கேடாக நடத்தியதுடன், நாட்டிலிருந்து தப்பி சென்றுள்ள குற்றப்புலனாய்வு பிரிவின் முன்னாள் காவல்துறை பரிசோதகர் நிஸாந்த டி சில்வா தொடர்பிலும் வினவியதாக பிரதிவாதி தரப்பில் போலி குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டதாக கூறி சட்டமா அதிபரினால் குறித்த வழக்கு தொடரப்பட்டிருந்தது.