வடகொரியாவிற்கு எதிராக சர்வதேச பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டுள்ள போதிலும், அணுவாயுத மேம்பாட்டை அந்த நாடு தொடர்ந்தும் மேற்கொள்வதாக ஐக்கிய நாடுகள் குற்றம் சுமத்தியுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையைச் சேர்ந்த, 15 உறுப்பு நாடுகள் இந்த தடையை விதித்துள்ளன.
வடகொரியாவில் இருந்து நிலக்கரி, இரும்பு, ஆடை மற்றும் கடல் உணவு உட்பட பல பொருட்கள் வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான தடை தற்போது அமுலில் உள்ளது.
எவ்வாறாறிருப்பினும், இந்த தடைகளை உதாசீனம் செய்த நிலையில், வடகொரியா அணுவாயுத சோதனைகளை தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றது.
பாரிய தடை விதிக்கப்பட்டிருந்த போதிலும், வடகொரியா சட்டவிரோதமாக ஏற்றுமதி நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்ததாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இருப்பினும், கடந்த ஆண்டு வடகொரியாவின் சட்டவிரோத நடவடிக்கைகள் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேவேளை, கடந்த 2017ம் ஆண்டு முதல் நீண்ட தூரம் பயணிக்க கூடிய எறிகணை பரிசோதனைகளை வடகொரியா மேற்கொண்டிருந்தது.
குறிப்பாக கடந்த மாதத்தில் மாத்திரம் வடகொரியா 7 ஏவுகணை பரிசோதனைகளை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.