இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 74வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு ஏறாவூர் கூட்டுறவு வைத்தியசாலையில் வெள்ளிக்கிழமை சுகாதார சேவைகள் இலவசமாக இடம்பெற்றன.
ஏறாவூர் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் எம்.எல். அப்துல் லத்தீப் தலைமையில் கூட்டுறவு வைத்தியசாலையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கூட்டுறவுத்துறை அதிகாரிகளும் ஊர்ப்பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.
முன்னதாக இரத்தத்தில் சீனியின் அளவு பார்த்தல் ஆவி பிடித்தல் இரத்த அழுத்தம் தொடர்பான பரிசோதனை உடற் திணிவுச் சுட்டி பரிசோதித்தல் போன்ற சேவைகள் இடம்பெற்றன.
சுதந்திர இலங்கையில் சமூக ஒற்றுமை எனும் தொனிப்பொருளில் இலங்கையின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட மூவினங்களையும் சேர்ந்த முன்னோர்களின் தியாகமும் சகவாழ்வும் பற்றி நிகழ்வில் பிரஸ்தாபிக்கப்பட்டதுடன் சம காலத்தில் அவ்வாறான இன ஒற்றுமை தமிழ் முஸ்லிம் சமூகங்களுக்கிடையில் கட்டி வளர்க்கப்படவேண்டியதன் அவசியம்பற்றியும் வலியுறுத்தப்பட்டது.
கூட்டுறவுச் சேவையில் சிறப்பாகப் பணியாற்றி ஒய்வு பெற்றுள்ளவரகளும் நிகழ்வில் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.
செய்தியாளர் – சக்தி