இலங்கைசெய்திகள்

இழந்துவரும் மக்கள் செல்வாக்கைப் வெற்றுக்கொள்ள தேர்தல் – மக்களுக்கு வரப் பிரசாதங்கள் அரசாங்கத்தின் திட்டம்

தற்போதைய அரசாங்கம் இழந்து வரும் செல்வாக்கை அதிகரித்துக் கொள்வதற்காக இரண்டு நடவடிக்கைகளை மேற்க்கொள்ள உள்ளதாக தென்னிலங்கை அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதனடிப்படையில், அரசியல் அமைப்பு இறுதி வரைபை எதிர்வரும் நவம்பர் அல்லது டிசம்பர் மாதங்களில் தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் மூலம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையில் சில மாற்றங்களைச் செய்யவும், வடக்கு, கிழக்கு இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

அடுத்த நடவடிக்கையாக 2023 ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்ட நிதி ஒதுக்கீட்டில் அதிகளவான வரப்பிரசாதங்களை மக்களுக்கு வழங்கி மக்களின் செல்வாக்கைப் பெற்றுக் கொள்வதற்கு திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய எதிர்வரும் 2023 ஆம் ஆண்டு பெப்ரவரி 5 ஆம் திகதி ஜனாதிபதியால் நாடாளுமன்றத்தை கலைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Back to top button