கொவிட் தொற்றுடன், பல உறுப்பு தொற்று எனப்படும் மிஸ்-சி நோய் சிறுவர்களிடையே பரவி வருவதாக பொரளை ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா நேற்று தெரிவித்துள்ளார்.
குறிப்பாக 5 வயதுக்கும் 15 வயதுக்கும் இடைப்பட்ட சிறுவர்களிடையே இது அதிகமாகக் காணப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
மிஸ்-சி நோய் தாக்கிய சிறுவர்கள் உயிரிழப்பதற்கும் நேரிடும் என வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தினால் இந்த நோயில் இருந்து காப்பற்ற முடியும். இந்நாட்களில் இந்த நோய் சிறுவர்களிடையே வேகமாக பரவி வருகிறது.
பெற்றோருக்கு நோய் இருந்து அது அவர்களுக்கு தெரியாமல் சிறுவர்களுக்கு தொற்றினால் இரண்டு வாரம் முதல் இரண்டு மாதத்திற்குள் காய்ச்சல் ஏற்படும். வீங்கிய கழுத்துக்கள், சுவாசிப்பதில் சிரமம், சிறுநீர் கழித்தல் குறைதல், சிறுநீர் கழிக்கும் போது இரத்தப்போக்கு, அல்லது இதயத் துடிப்பு குறைவாக இருத்தல் போன்ற அறிகுறிகள் காணப்படும் என விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.