ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாரதி துஷ்மந்தவுக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.
அவருக்கு நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் இவ்வாறு தொற்றுறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.