இலங்கைசெய்திகள்

வவுனியா மாவட்டத்தில் மொழி உரிமை திட்டமிட்டு அழிக்கப்பட்டுவருகின்றது – சமூக ஒற்றுமைக்கான மக்கள் பேரவை குற்றச்சாட்டு!!

vavuniya

வடக்குக்கிழக்கு மாநிலங்களில் அரசியலமைப்பில் அரச கரும மொழியாக தமிழ் மொழி அமுலாக்கப்பட்டுள்ளது. எனினும் எமது பகுதிகளிலுள்ள அரச நிர்வாகத்தினரால் திட்டமிட்டமுறையில் தமிழ் மொழி உரிமை அழிக்கப்பட்டு வருகின்றது . இவ்வாறு சமூக ஒற்றுமைக்கான மக்கள் பேரவையின் தலைவர் மாசிலாமணி ஆதங்கம் தெரிவித்துள்ளார் .

அவர் மேலும் தெரிவிக்கையில் , வவுனியா மாவட்டத்தில் அரச நிர்வாகச்சேவையில் உள்ள அதிகாரிகள் தமது வாகனங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பதவி நிலை விளம்பரப்பதாதையில் தமிழ் மொழியைப் புறக்கணித்து சிங்களம் மற்றும் ஆங்கில மொழியில் காட்சிப்படுத்தியுள்ளதை அவதானிக்க முடிந்துள்ளது . அண்மையில் இது குறித்து வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரிடம் தங்களது வாகனத்தில் தமிழ் மொழிக்கு முன்னுரிமை வழங்கப்படவில்லை . ஆங்கிலம் மற்றும் சிங்கள மொழியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியிருந்தேன் . அது தனது தனிப்பட்ட வாகனம் என்று தெரிவித்துவிட்டுச் சென்றுவிட்டார் .

தற்போது எமக்கு இருக்கும் ஒரே பலம் மொழி உரிமையே அதுவே எமது இனத்தின் அடையாளம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபச்சாவின் ஆட்சிக்காலத்தில் அரச கரும் மொழிகள் அமைச்சாரக வாசுதேவ நாயணக்கார நியமிக்கப்பட்டிருந்தார் . அவ் அமைச்சரினால் வவுனியா மாவட்ட செயலகத்தில் மொழி அமுலாக்கல் செயலணிக்கு 13 இலட்சம் ரூபாய் செலவில் அலுவலகம் ஒன்று அமைக்கப்பட்டு மிகப் பெரும் நிகழ்வாக அவ் அலுவலகம் திறந்துவைக்கப்பட்டிருந்தது . தற்போது அவ் அலுவலகத்தினூடாக மொழி உரிமை அமுல்படுத்தப்படவில்லை . எமது பகுதிகளில் எமது மொழி உரிமைகள் திட்டமிட்ட வகையில் அழிக்கப்பட்டு வருகின்றது இந்நடவடிக்கையை தடுத்து நிறுத்தி எதிர்காலத்தில் இடம்பெறவுள்ள சிங்கள மயமாக்கலைத்தடுத்து நிறுத்துவதற்குரிய நடவடிக்கைகளை இங்குள்ள மக்கள் பிரநிதிநிகள் மேற்கொள்ள முன்வரவேண்டும் என்று மேலும் தெரிவித்துள்ளார் .

செய்தியாளர் – கிஷோரன்.

Related Articles

Leave a Reply

Back to top button