சுமார் 80,000 ஆண்டுகளுக்கு முன்னர் நாட்டில் இருந்ததாக கூறப்படும் இரண்டு காண்டாமிருகங்களின் எச்சங்கள் பதுளை – மடுல்சீமை மற்றும் ரிலாவுலு பிரதேசங்களில் உள்ள வயல் நிலங்களில் இன்னும் உள்ளதாக விலங்கியல் நிபுணர் கெலும் நளிந்த மனமேந்திர ஆரச்சி தெரிவித்துள்ளார்.
சுமார் 26 வருடங்களுக்கு முன்னர் புதையல் தோண்டும் தொழிலாளர்களால் அவை மீட்கப்பட்டு அவற்றின் மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டன.
அந்த சந்தர்ப்பத்தில் குறித்த இரண்டு காண்டாமிருகங்களின் பற்கள் மாத்திரம் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டதோடு அவை சுமார் 80 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்ததெனத் தெரியவந்தது.
எவ்வாறாயினும் இதனை தொடர்ந்து குறித்த எச்சங்கள் அந்த சந்தர்ப்பத்தில் பெய்த கடும் மழை காரணமாக நீரில் மூழ்கியதோடு அங்கு மண்சரிவு ஏற்பட்டதாகவும் விலங்கியல் நிபுணர் கெலும் நளிந்த மனமேந்திர ஆரச்சி தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக குறித்த எச்சங்கள் இன்னும் 62 அடிக்குக் கீழாக மண்ணுக்குள் புதைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இந்நிலையில், அந்த பகுதிகளில் அகழ்வு பணிகளை மேற்கொண்டு எச்சங்களை மீட்குமாறு விலங்கியல் நிபுணர் கெலும் நளிந்த மனமேந்திர ஆரச்சி அதிகாரிகளைக் கோரியுள்ளார்.