இலங்கையில் மேலும் 160 ஒமக்ரொன் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று ஸ்ரீ ஜயவர்தனபுரம் பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, எதிர்ப்பு சக்தி ஆய்வு மற்றும் மரபணு விஞ்ஞான நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர உறுதிப்படுத்தியுள்ளார்.
ஒமக்ரொன் தொற்றாளர்களைக் கண்டறிவதற்காக ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கு அனுப்பப்பட்ட 182 மாதிரிகள் தொடர்பான இறுதி அறிக்கை இன்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திடம் கையளிக்கப்பட்டதை அடுத்து இந்தத் தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் – சுடர்