வவுனியா ஈரட்டை பகுதியில் 250 கிலோகிராம் கேரளா கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவரை இன்றையதினம் இராணுவத்தினர் கைது செய்துள்ளனர்.
வன்னி இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து இன்றையதினம் (15) பிற்பகல் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கு நோக்கி பயணித்த கூலர் ரக வாகனம் ஒன்றை இராணுவத்தினர் சோதனையிட்ட போதே கேரளா கஞ்சாவுடன் சந்தேக நபர் ஒருவரைக் கைது செய்துள்ளதாக வவுனியா ஈரட்டை பெரியகுளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வாகனத்தை இடைமறித்து சோதனை மேற்கொண்ட இராணுவத்தினர் குறித்த லொறியில் இருந்து 250 கிலோவுக்கும் அதிகமான கேரளா கஞ்சாவை 123 சிறிய கஞ்சா பொதிகளாக்கி வாகனத்தின் பின்புறம் உள்ள இரகசிய பெட்டியொன்றில் வைக்கப்பட்டிருந்ததை க் கண்டு மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சந்தேக நபர் யாழ்ப்பாணம் கீரிமலை பகுதியை சேர்ந்தவர் எனவும் கைது செய்யப்பட்ட சந்தேக நபரையும் கைப்பற்றப்பட்ட கஞ்சாவையும் வவுனியா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக இராணுவ புலனாய்வு அதிகாரிகள் ஈரட்டை பெரியகுளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தியாளர்- கிஷோரன்