இலங்கைசெய்திகள்

இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்க இந்தியா தயார்! – ஜெய்சங்கர் தெரிவிப்பு

கடினமான சந்தர்ப்பங்களை எதிர்கொள்ளும் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கத் தயார் என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

புத்தாண்டை முன்னிட்டு வாழ்த்துத் தெரிவிக்கும் நோக்கில் இலங்கை வெளிவிவகார அமைச்சரான பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸைத் தாம் தொலைபேசியில் தொடர்புகொண்டதாகவும் அவர் கூறியுள்ளார். ]

இதன்போது இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக தொடர்ச்சியாக தொடர்புகளைப் பேணுவதற்கு இணங்கியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

திருகோணமலை எண்ணெய்க் குதங்களை அபிவிருத்தி செய்வதற்காக, இரண்டு நாடுகளுக்கும் இடையில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ள நிலையில், இந்திய வெளிவிவகார அமைச்சரின் இந்தக் கருத்து வெளியாகியுள்ளது.

இந்த ஒப்பந்தம் இருதரப்பு வலுசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள கடன் உதவியை நீடிப்பது குறித்து, தொடர்ந்தும் பேச்சுகள் இடம்பெறுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற கொள்கையின் கீழ், இலங்கையை முக்கியமான தரப்பாகக்கொண்டு இந்தியா ஒத்துழைப்பு வழங்கும் என்றும் புதுடில்லியில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button