உலகம்செய்திகள்

தலிபான்கள் வெளியிட்டுள்ள அடுத்த அதிரடி உத்தரவு!!

The Taliban

தலிபான்கள் அடுத்து ஒரு புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளார்கள்.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதையடுத்து அங்குக் கடந்த ஆகஸ்ட் மாதம் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றினார்கள்.

நாட்டைத் தங்களின் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த தலிபான்கள் புதிய அரசாங்கத்தையும் அமைத்தனர்.

இதையடுத்து பல்வேறு கட்டுப்பாடுகளை கொண்டு வந்த தலிபான்கள், குறிப்பாக பெண்களுக்கு கடும் நிபந்தனைகளை விதித்தனர். அவர்கள் பள்ளிக்கு செல்லக்கூடாது. ஆண் உறவினர் துணையின்றி வெளியே செல்லக் கூடாது என்பது போன்ற உத்தரவுகளை பிறப்பித்தனர்.

அதே போன்று தற்போது துணிக்கடைகளில் உள்ள அலங்கார பொம்மைகளின் தலையை வெட்டி எறிய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருக்கிறது.

இதுகுறித்து அந்நாட்டின் நல்லொழுக்கத்தை மேம்படுத்துதல் அமைச்சகத்தின் தலைவர் அஜிஸ் ரகுமான் கூறும்போது, ‘மனித உருவங்களை காட்சிப்படுத்துவது ஷரியத் சட்டத்துக்கு எதிரானது என்பதால் கடைகளில் உள்ள பொம்மைகளின் தலைகளை துண்டிக்குமாறு நாங்கள் உத்தரவிட்டுள்ளோம்.

அவர்கள் தலையை மட்டும் மூடி வைத்தாலோ அல்லது முழு பொம்மையை மறைத்து வைத்தாலோ அவர்களின் கடை மற்றும் வீடுகளில் கடவுள் ஆசீர்வதிக்கமாட்டார்’ என்று தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button