உலகம்செய்திகள்

அமெரிக்கா, 8 ஆபிரிக்க நாடுகளுக்கான பயணத் தடையை நீக்கியது!!

america

தென் ஆபிரிக்கா உள்ளிட்ட 8 ஆபிரிக்க நாடுகளுக்கு விதித்த பயண தடையை ஜனாதிபதி ஜோ பைடன் நீக்கியுள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

தென்ஆபிரிக்காவில் கடந்த நவம்பரில் ஒமைக்ரொன் கொவிட் திரிபு கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து பல்வேறு நாடுகள் வெளிநாட்டு பயண கட்டுப்பாடுகளை விதித்தன.

அதற்கமைய, 8 ஆபிரிக்கா நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு தமது நாட்டுகள் நுழைய அமெரிக்கா தடை விதித்தது.

இந்த நிலையில், தென்ஆபிரிக்கா, பொட்ஸ்வானா, மொசாம்பிக், சிம்பாப்வே, நமீபியா, எஸ்வாடினி, லெசோதோ மற்றும் மலாவி ஆகிய 8 ஆபிரிக்க நாடுகளுக்கு விதித்த பயண தடையை ஜனாதிபதி ஜோ பைடன் நீக்கியுள்ளாரென வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button