”புத்தி கெட்ட மனிதர் எல்லாம்”
இன்று மாலை 6.30 VIP காட்சி ராஜாவில் குடும்பமாக பார்வையிட்டேன். மிக்க மகிழ்ச்சி.
மிக மிக சிறப்பான படம்
சிறந்த கதை எமது சமூகத்தில் தற்காலத்தில் குறிப்பாக சொல்லப்படவேண்டிய கருத்து கதையாக்கப்பட்டுள்ளது.
இசை அருமையிலும் அருமை விறுவிறுப்பானதும் கூட
கமெரா கையாளப்பட்ட விதம் அனைத்து காட்சிகளிலும் சிறப்பு.
.
முதல் பாதி விழுந்து விழுந்து சிரிக்கவும் அடுத்த பாதி சிந்திக்கவும் விறுவிறுப்பு நிறைந்ததாகவும் காதலும் கருத்தும் கலந்தும் இருந்தது.
பாடல்களும் மிகச்சிறப்பு
அனைத்து நடிகர்களும் இப்படி அவர்கள் நடித்திருக்கலாம் என்று சொல்லத்ததேவையற்ற வகையில் தங்களுக்கு வழங்கப்பட்ட பாத்திரங்களை செவ்வனே செய்துள்ளனர்
தென்னிந்தியத்திரைப்படங்களுக்கு சற்றும் சளைக்காமால் இருக்கத்தக்க வகையில் படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர்.
குடும்பத்துடன் சென்று பார்க்கக்கூடிய படம். கட்டாயம் அனைவரும் திரையரங்கில் சென்று பாருங்கள் நம்பி ரிக்கட் எடுக்கலாம் கொடுக்கிற காசுக்கு மேலாக திருப்தியடையலாம்.
கதையானது அளவான காதல், வில்லத்தனம், சிரிப்பு, கவலை அனைத்தும் கலந்த கலவை.
ஈழ சினிமா குறித்த எனது பல எதிர்பார்ப்புக்களை இந்தப்படம் நிறைவு செய்துள்ளது.
படப்பிடிப்பில் நவீன ஒளியமைப்பு சாதனங்கள் பயன்படுத்தப்பட்டிருந்தால் படம் காட்சி வேற லெவலாயிருந்திருக்கும். ஆனால் படத்தில் லயித்திருந்தமையால் இந்த குறை பெரிதாக தெரியவில்லை.
சூபுத்திகெட்டமனிதர்_எல்லாம் சூஈழசினிமா
பதிவு – தங்கராஜா தவறூபன்
Leave a Reply