நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள சமையல் எரிவாயு தட்டுப்பாட்டுக்கு நுகர்வோரின் பாதுகாப்பும் ஒரு காரணம் என்று கூட்டுறவுச் சேவைகள், சந்தைப்படுத்தல் அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“சமையல் எரிவாயுக்களின் தரம் தொடர்பில் பரிசோதிக்கும் அதிகாரம் இலங்கை கட்டளைகள் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. சமையில் எரிவாயு சிலிண்டர்களின் தட்டுப்பாடுக்கு நுகர்வோரின் பாதுகாப்பும் ஒரு காரணம்.
சமையில் எரிவாயுக்கள் கப்பலில் இருந்து இறக்கப்பட்டு, சந்தைகளுக்கு விநியோகிக்கும் வரையில் நுகர்வோர் அபிவிருத்தி அதிகாரசபையினர் அது தொடர்பில் பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டில் தற்போது சமையில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நுகர்வோரின் பாதுகாப்பு தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்படுவதும் தட்டுப்பாட்டுக்குக் காரணம்.
சமையல் எரிவாயு தட்டுப்பாடுகளை நிவர்த்தி செய்ய அந்த நிறுவனங்கள் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” – என்றார்.
செய்தியாளர் – சுடர்