செய்திகள்விளையாட்டு

அவுஸ்திரேலியா வசமானது ஏஷஸ் டெஸ்ட் தொடர் !!

Ashes Test Series

அவுஸ்திரேலிய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 14 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வென்றுள்ளது.

அஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஏஷஸ் தொடரின் 3 ஆவது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்றது.

இந்த டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 185 ஓட்டங்களை மட்டுமே பெற்று சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

அதனை தொடர்ந்து நேற்று நடைபெற்ற இரண்டாம் நாள் ஆட்டத்தில் அவுஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸில் 267 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது.

இதன்மூலம், அவுஸ்திரேலிய அணி 82  ஓட்டங்கள் முன்னிலையில் இருந்தது. அணிசார்பில் அதிகபட்சமாக ஆரம்ப துடுப்பாட்ட வீரர் மார்கஸ் ஹாரிஸ் ஓட்டங்களை பெற்றார்.

இங்கிலாந்து அணி சார்பில் அதிகபட்சமாக ஆண்டர்சன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ரொபின்சன் மற்றும் மார்க் வுட் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். ஸ்டொக்ஸ் மற்றும் லீச் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.

அதனை தொடர்ந்து, இங்கிலாந்து அணி தனது 2 ஆவது இன்னிங்ஸை தொடங்கியது. இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 31 ஓட்டங்களை எடுத்திருந்தது.

இந்நிலையில், இன்றைய மூன்றாம் நாள் ஆட்டத்தில், அவுஸ்திரேலிய அணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாத இங்கிலாந்து அணி வீரர்கள் குறைந்த ஓட்டங்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

இதனால் இங்கிலாந்து அணி 68 ஓட்டங்களுக்கு சுருண்டது. அணிசார்பில் அதிகபட்சமாக தலைவர் ஜோ ரூட் 28 ஓட்டங்களை பெற்றார்.

அஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக ஸ்கொட் போலன்ட் 6 விக்கெட்டுகளை கைப்பற்றி வெற்றிக்கு வழிவகுத்தார். மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளையும் கெமரூன் கிரீன் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இதன்மூலம், அஸ்திரேலிய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 14 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வென்றது.

மேலும், 5  போட்டிகள் கொண்ட ஏஷஸ் டெஸ்ட் தொடரை 3 – 0 என்ற கணக்கில் அவுஸ்திரேலிய அணி கைப்பற்றியது. சிறப்பாக பந்துவீசிய அவுஸ்திரேலிய அணியின் ஸ்கொட் போலன்ட் ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார். அவருக்கு ‘ஜோனி முல்லாக் பதக்கமும்’ வழங்கப்பட்டது.

Related Articles

Leave a Reply

Back to top button