இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் தலைவரும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவருமான சவுரவ் கங்குலிக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதனையடுத்து, அவர் கொல்கத்தாவில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எனினும், அவருக்கு பாரதூரமான நோய் அறிகுறிகள் எவையும் இல்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் சவுரவ் கங்குலிக்கு மாரடைப்பு ஏற்பட்டு கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்த அவருக்கு மயக்கம் ஏற்பட்டதாகவும், அதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அதன்போது, அவருக்கு சத்திர சிகிச்சையொன்றும் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.