மத்திய மாகாணத்திற்குட்பட்ட உதவி ஆசிரியர்கள் நியமனம் வழங்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆளுநர் அலுவலகத்திற்கு ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.
கடந்த 15ஆம் திகதி அவர்களுக்கான நியமனம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட போதிலும் கொவிட்-19 காரணமாக குறித்த நிகழ்வு பிற்போடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
எவ்வாறாயினும் பயிற்சி பட்டதாரிகளுக்கான நியமனத்தை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், தங்களுக்கான தீர்வு வழங்கப்பட வேண்டும் என மத்திய மாகாணத்திற்குட்பட்ட உதவி ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.