பஸ் கட்டண அதிகரிப்பு தொடர்பில் இன்று அறிவிக்கப்படும் என அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
பஸ் கட்டண அதிகரிப்பு தொடர்பில் இன்று தீர்மானமிக்க கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
இதேவேளை டீசலுக்கு அரசாங்கம் நிவாரணம் வழங்காவிடின் பஸ் கட்டணத்தை 25 ரூபாவாக அதிகரிக்க நேரிடும் என பஸ் தொழிற்சங்கங்கள் நேற்று தெரிவித்திருந்தன.
எவ்வாறாயினும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பயணிகள் பஸ் சேவையின் கட்டணங்கள் அதிகரிக்கப்பட மாட்டாது என இராஜங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் தனியர் பஸ் உரிமையாளர்கள் சங்கம் முன்வைத்துள்ள கோரிக்கைகளுக்கும் அனுமதி வழங்கப்படமாட்டாது எனவும் குறிப்பிட்டிருந்தார்
மேலும் தனியார் பஸ்உரிமையாளர்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்கு பதிலாக வேறு வேலைத்திட்டங்கள் முன்வைக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.