18.12.2021 இன்று சனிக்கிழமை காலை 11 மணியளவில் இலங்கை ஆசிரியர் சங்கத்தலைவர் ஜோசப் ஸ்டாலின் யாழ். மாவட்ட அதிபர் ஆசிரியர்களுடனான கலந்துரையாடல் ஓன்றில் கலந்துகொண்டார். யாழ் மத்திய கல்லூரியில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில்
எதிர்வரும் ஜனவரி 20ம் திகதிக்கு்முன்னர் அதிபர் ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினைகளுக்கு நிலையான தீர்வு கிட்டும் எனவும் அவ்வாறு எட்டப்படவில்லையெனின் மீண்டும் பாரியளவிலான போராட்டம் நடைபெறும் எனவும்
வடமாகாணம் சார்பாக தேசிய ரீதியில் இடம்பெறும் ஆசிரியர் நலன்சார் போராட்டங்களுக்கு பூரண ஒத்துழைப்பை வழங்குமாறும் யோசப் ஸ்டாலின் கருத்துரைத்தார்
அத்துடன்
ஜனவரி மாத இறுதியில் வடமாகாணம் ஆசிரியர் பேராளர் மாநாடு ஒன்றை கிளிநொச்சியில் ஒரு இடத்தில் நடாத்த ஏற்பாடு செய்வதாகவும் இம் மாநாட்டில் அனைத்து ஆசிரியர்களையும் கலந்துகொள்ளுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
யாழ். நகரைச் சேர்ந்த ஆசிரியர்கள் பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.