உலகம்செய்திகள்

பிரபல நடிகை சுட்டுக்கொலை – மெக்சிகோவில் சம்பவம்!

Tania Mendoza

மெக்சிகோ நாட்டில் பெண்கள் மீதான வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அங்கு ஒரு நாளில் சராசரியாக 10 பெண்கள் கொலை செய்யப்படுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
அந் நாட்டின் பிரபல நடிகையான டானியா மெண்டோசா மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனை தடுத்து நிறுத்த கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தி பெண்ணியவாதிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் அந்த நாட்டின் பிரபல நடிகையான டானியா மெண்டோசா மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

42 வயதான மெண்டோசாஇ 2005-ல் ‘லா மேரா ரெய்னா டெல் சுர்’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் புகழ்பெற்றார். அது மட்டுமின்றி சமீபத்திய ஆண்டுகளில் இவர் பாடகியாகவும் வலம் வந்தார்.

இந்நிலையில் மெக்சிகோவின் மோரேலோஸ் குர்னவாகா நகரில் உள்ள கால்பந்தாட்ட பயிற்சி மையத்திலிருந்துஇ தனது 11 வயது மகனை வீட்டுக்கு அழைத்து செல்வதற்காக மெண்டோசாஇ பயிற்சி மையத்துக்கு வெளியே மகிழுந்தில் காத்துக் கொண்டிருந்துள்ளார்.

அதன்போது உந்துருளியில் வந்த மர்ம நபர்கள் 2 பேர்இ மெண்டோசாவை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி சென்றுள்ளனர். சம்பவ இடத்திலேயே மெண்டோசா பலியாகியுள்ளார்.

கொலைக்கான பின்னணி என்னவென்பது உடனடியாக தெரியவராத நிலையில் இதுகுறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Back to top button