இலங்கை

உரம் மோசடி: விசாரணைக்கு ஜனாதிபதி ஆணைக்குழு வேண்டும்! – அமரவீர வலியுறுத்து

உரம் மோசடி தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக முழுமையான அதிகாரம் அடங்கிய ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை அமைக்குமாறு ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அக்கட்சியின் சிரேஷ்ட உப தலைவரும் அமைச்சருமான மஹிந்த அமரவீர கூறியதாவது:-

“நாம் அரசில் அங்கம் வகிக்கின்றோம் என்பதற்காக மௌனம் காக்க முடியாது. சீன நிறுவனத்திடமிருந்து உரம் இறக்குமதி செய்ததற்குத் துறைசார் அமைச்சரும் அதனுடன் தொடர்புபட்டவர்களுமே பொறுப்புக்கூற வேண்டும். மக்கள் பணத்திலிருந்து சீன நிறுவனத்துக்குக் கொடுப்பனவை வழங்கக்கூடாது என்பதே எமது நிலைப்பாடு. சம்பந்தப்பட்ட நபர்கள்தான் அதனைச் செலுத்த வேண்டும்.

அதேவேளை, சேதன பசளை மற்றும் திரவ உரம் தொடர்பில் இடம்பெற்றுள்ளது எனக் கூறப்படும் மோசடிகள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக முழு அதிகாரம் அடங்கிய ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை அமைக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கவுள்ளேன்” – என்றார்.

Related Articles

Leave a Reply

Back to top button