இலங்கைசெய்திகள்பிரதான செய்திகள்

கொகரெல்ல பகுதியில் கடத்தப்பட்ட சொகுசு கார் மாலபேயில் மீட்பு

குருணாகல், கொகரெல்ல பகுதியில் வீடொன்றின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் கடத்தப்பட்ட சுமார் 9 மில்லியன் ரூபா பெறுமதியான சொகுசு கார் மாலபே பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரது வீட்டில் கார் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

காரை திருட வந்த சந்தேக நபர்களின் ஜீப் வாகனும் அவர்கள் வசமிருந்த கைத் துப்பாக்கி ஒன்றும் பொலிஸாரினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கொகரெல்ல பகுதியில் உள்ள வீடொன்றின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சொகுசு கார் கடந்த 2 ஆம் திகதி கடத்தப்பட்டது.

பொலிஸ் உத்தியோகத்தர்கள் என கூறிக்கொண்டு பலவந்தமாக வீட்டுக்குள் நுழைந்து அங்கிருந்தவர்களை அச்சுறுத்தி கொள்கை் கும்பல் காரை கொள்ளையடித்து சென்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

ගොකරැල්ලේදී පැහැරගත් මෝටර් රථය මාලඹේදී සොයාගැනේ- සැකකරුවෙකුත් අත්අඩංගුවට

Related Articles

Leave a Reply

Back to top button