பிள்ளைகளை பெற்றோர் கண்டிப்பாக வளர்ப்பது சரியா – தவறா ? – குழப்பம் தெளிய …
Understanding parent children
பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்குமான புரிதல் என்பது இன்றைய காலத்தில் மிகவும் குறைந்த ஒன்றாக மாறிவிட்டது. காலமாற்றம் காரணமா என்பது அனைவருக்குமே உள்ள புதிரான ஒரு கேள்விதான். பெற்றோர் விதிக்கும் அதீத கட்டுப்பாடுகள் பிள்ளைகள் எதிர்பார்க்கும் அதிக சுதந்திரம் இரண்டுக்குமான போராடட்டமே இன்று இளையோர் மத்தியில் அதிகரித்துள்ள தற்கொலைக்கான முக்கிய காரணியாகும்.
இளம் வயதுப் பிள்ளைகள் தற்கொலை செய்வது ஒரு கலாசாரமாக மாறியிருக்கிறது. அதுவும் அண்மைக் காலத்தில் யாழ்ப்பாணத்தில் தற்கொலைச் சம்பவங்கள் அதிகம் பதிவானதெனலாம். இதில் வருந்தத்தக்க விடயம் என்வென்றால் புத்திசாலியான மாணவர்கள் பலர் இந்த தற்கொலை வலைக்குள் மாட்டிக் கொண்டதுதான்.
கேட்ட உடனே பிள்ளைகளுக்கு எல்லாவற்றையும் கொடுத்துவிடுகின்ற பெற்றோரின் வளர்ப்புமுறை புறொயிலர் கோழிகளைப் போல சகல இடங்களுக்கும் தாமே ஏற்றி இறக்கி அதுவே எதையும் தாங்கமுடியாத பூஞ்சை மனதை கொடுத்துவிட எதிர்காலத்தில் சின்ன காற்றுக்கு கூட ஈடுகொடுக்க முடியாது தைரியம் இழக்கின்ற மனநிலை என பிள்ளைகளின் இம்முடிவுகளுக்கு இவைபோன்றவையும் முக்கிய காரணமாகும்.
பிரபல பேச்சாளர் சுகி சிவம் ஐயா அவர்கள் பிள்ளைகளின் வளர்ப்பு பற்றிய கூறிய நல்லதொரு விடயம் வீடியோவாக உங்களுக்காக இங்கே இணைக்கப்பட்டுள்ளது.
இந்த வீடியோ கண்டிப்பின் நியாயத்தை பெற்றோருக்கும்
பிள்ளைகளுக்கும் ஏற்றுக்கொள்ள கூடிய விதத்தில் தெளிவாக விளங்குகிறது . நீங்களும் பார்த்து உங்கள் பிள்ளைகளுக்கும் காண்பித்து ஆரோக்கியமான மாணவர் சமூகத்தை உருவாக்குவோம்.
பிரதம ஆசிரியர்
ஐவின்ஸ் ஆசிரியர் பீடம்.