1780 ஆம் ஆண்டில் டப்ளின் நகரில் ஒரு நாடகக் கொட்டகையில் மேலாளர் டாலி என்பவர் தனது நண்பருடன் மொழி தொடர்பாக ஒரு விவாதத்தில் ஈடுபட்டிருந்த போது ஆவேசமாகி “இன்னும் 24 மணி நேரத்தில் பொருளே இல்லாத ஒரு சொல்லைப் பிரபலமாக்கிக் காட்டுகிறேன்இ பார்!” என்று சவால் விட்டார்.
மறுநாள் காலை டப்ளின்வாசிகள் கண் விழித்தபோது டப்ளின் நகரச் சுவர்கள் எல்லாவற்றிலும் quiz என்ற வார்த்தை காணப்பட்டது. அப்படியென்றால் என்ன என்று ஒருவரையொருவர் கேட்டுக்கொண்டுத் தலையைப் பிய்த்துக் கொண்டார்கள். இந்தச் சொல் அன்று மாலைக்குள் டப்ளின் நகரம் முழுக்கப் பிரபலமான சொல்லாகிவிட்டது. டாலி வென்றுவிட்டார்.
அன்றிலிருந்துஇ கேள்வி கேட்டு பதில் வரவழைப்பதற்கு ‘க்விஸ்’ என்கிற சொல் பயன்பாட்டிற்கு வந்து விட்டது.