இலங்கைசெய்திகள்

கொடுகடன் தகவல் பணியகம் (CRIB) “கொவிட்-19 சுகாதாரக் கவனிப்பு மற்றும் சமூகப் பாதுகாப்பு நிதியத்திற்கு” ரூ.50 மில்லியனை அன்பளிப்புச்செய்தது!!

Donation of Rs.50 million

நாட்டில் கொவிட்-19 நோய்த்தொற்று பரவலினை கட்டுப்படுத்தி அதனோடிணைந்த சமூக நலனோம்புகை நிகழ்ச்சித்திட்டத்தினை இலக்காகக் கொண்டு நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை வலிமைப்படுத்துவதற்காக சனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களினால் தாபிக்கப்பட்ட “கொவிட்-19 சுகாதார கவனிப்பு மற்றும் சமூகப் பாதுகாப்பு நிதியத்திற்கு” பரந்தளவிலான பொறுப்புகள் உரித்தளிக்கப்பட்டுள்ளன.

“கொவிட்-19 சுகாதார கவனிப்பு மற்றும் சமூகப் பாதுகாப்பு நிதியத்திற்கு” உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் கொடையாளிகள் தமது நிதியியல் பங்களிப்புக்களை வழங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
“கொவிட்-19 சுகாதார கவனிப்பு மற்றும் சமூகப் பாதுகாப்பு நிதியத்தின்” தலைவர் என்ற வகையில் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலிடம் கொடுகடன் தகவல் பணியகத்தின் பொது முகாமையாளர் திரு. நந்தி அந்தோனி “கொவிட்-19 சுகாதார கவனிப்பு மற்றும் சமூகப் பாதுகாப்பு நிதியத்திற்காக” ரூ.50 மில்லியன் கொண்ட அன்பளிப்பினை வழங்கிவைத்தார்.

Related Articles

Leave a Reply

Back to top button