கடும் பாதுகாப்புக்கு மத்தியில் யாழிற்கு வருகை தந்துள்ள நிலையில், சீன தூதுவர் உள்ளிட்ட தூதரக அதிகாரிகள் இன்று மதியம் பருத்தித்துறை முனைப் பகுதியையும் பார்வையிட்டுள்ளனர்.
சீன தூதுவர் கீ சென்ஹொங் தலைமையில் சீன அதிகாரிகள், இரண்டு நாள் பயணமாக வடக்கு மாகாணத்திற்காண விஜயத்தினை மேற்கொண்டுள்ளனர்.
இதேவேளை கடந்த சில காலங்களில் வடக்கிலுள்ள மூன்று தீவுகள் சீனாவிடம் கையளிக்கப்பட்டவுள்ளதாக வெளியான தகவல் பெரும் சர்ச்சையினை ஏற்படுத்தியிருந்தது.
அதோடு வடக்கின் மூன்று தீவுகளில் முன்னெடுக்கப்படவிருந்த மின் திட்டத்தை சீனா கைவிட்டுள்ள நிலையில் சீன தூதுவர், வடக்குக்கான பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
இந்த நிலையில் அவரது விஜயம் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில் , இந்தியாவும் , சீன தூதுவர் உள்ளிட்ட குழுவின் வடக்கிக்கான இந்த விஜயத்தினை மிகவும் உன்னிப்பாக அவதானித்துக்கொண்டிருக்கின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.