இன்று மட்டக்களப்பு மாநகர சபைக்கு ஒரே நாளில் இரண்டு ஆணையாளர்கள் சம்பிரதாய பூர்வமாக பதவிகளை ஏற்ற சம்பவம் பதிவானது.
மாநகரசபை ஆணையாளராக கடமையாற்றி வந்த எம்.தயாபரனுக்கு பதிலாக புதிய ஆணையாளராக ந.சிவலிங்கம் கிழக்கு மாகாண ஆளுநரால் நியமிக்கப்பட்டிருந்தார்.
இந்தநிலையில் அவர் இன்று முற்பகல் தமது கடமைகளை சம்பிராய பூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.
இதனையடுத்து பிற்பகல் புதிய ஆணையாளராக கடமைகளை பொறுப்பேற்ற ந.சிவலிங்கத்துக்கு பதிலாக மீண்டும் முன்னாள் ஆணையாளர் எம். தயாபரன் கிழக்கு மாகாண ஆளுநரால் நியமிக்கப்பட்டார்.
இதற்கமைய அவர் இன்று பிற்பகல் தமது கடமைகளை பெறுப்பேற்றார்.
மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளராக எம்.தயாபரன் நியமிக்கப்பட்டு இரண்டு வருடங்களாக கடமையாற்றி வருகின்றார்.
இந்த நிலையில் மட்டக்களப்பு மாநகரசபை முதல்வருக்கும், மாநகரசபை ஆணையாளர் தயாபரனுக்கும் இடையே மாநகரசபை செயற்பாட்டில் முரண்பாடு ஏற்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து ஆணையாளருக்கு சபையினால் வழங்கப்பட்ட பல அதிகாரங்கள் மீளப்பெறப்பட்டன.
அதனை தொடர்ந்து முதல்வருக்கும் ஆணையாளருக்கும் இடையே தொடர்ந்த முறுகல் நிலையை அடுத்து ஆணையாளருக்கு எதிராக மாநகரசபை முதல்வர் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்குதல் தொடர்ந்த நிலையில் ஆணையாளருக்கு எதிராக நீதிமன்றம் இடைக்கால உத்தரவு ஒன்றையும் வழங்கியிருந்தது.
தொடர்ந்தும் ஆணையாளர் நீதிமன்ற தடை உத்தரவை மீறி செயற்படுவதாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்றை மாநகரசபை முதல்வர் மட்டக்களப்பு மேல்நீதிமன்றில் தாக்கல் செய்தார்.
இதனை தொடர்ந்து கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் பிரதி பணிப்பாளராக கடமையாற்றிவந்த ந.சிவலிங்கம் புதிய ஆணையாளராக நியமிக்கப்பட்டார்.
அரசியல் காரணிகளால் அவர் பதவி நீக்கப்பட்டிருந்ததாகவும் அதனை உரிய வகையில் ஆராய்ந்ததன் பின்னர் மீள ஆணையாளராக எம்.தயாபரனை நியமித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.