வவுனியா வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மூன்றாவது கோவிட் தடுப்பூசி பைசர் வழங்க சுகாதார பிரிவினரால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வவுனியா வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் உள்ள அரச மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்களில் பணிபுரிவோர் மற்றும் பாடசாலை கல்வி மற்றும் கல்விசாரா ஊழியர்கள் அனைவரும் தமது அலுவலகங்களிற்கு அல்லது பாடசாலைகளிற்கு அருகில் உள்ள தடுப்பூசி நிலையங்களிற்கு சென்று 3 ஆவது தடுப்பூசியை (பைசர்) பெற்றுக்கொள்ள முடியும்.
அந்தவகையில் (13.12.21) வவுனியா வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை மற்றும் நெடுங்கேணி வைத்தியசாலையிலும் , (14.12.21) வவுனியா வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை, நெடுங்கேணி வைத்தியசாலை மற்றும் கற்குளம் பொதுநோக்கு மண்டபத்திலும் , (15.12.21) கனகராயன்குளம் வைத்தியசாலை , (16.12.21) மாறாஇலுப்பை பொதுநோக்கு மண்டபம் மற்றும் நடமாடும் சேவை , (17.12.21) வவுனியா வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை மற்றும் நடமாடும் சேவை ஆகிய 5 நிலையங்களில் 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான பூஸ்டர் தடுப்பூசி காலை 9 மணி தொடக்கம் பிற்பகல் 2 மணி வரை ஏற்றப்படவுள்ளது.
வவுனியா வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் 30 வயதிற்கு மேற்பட்டவர்கள் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்று மூன்று மாதங்கள் கடந்திருப்பின் தமது தடுப்பூசி அட்டையுடன் சென்று மூன்றாவது தடுப்பூசி பூஸ்டரினை (பைசர்) பெற்று கொள்ள முடியும். அத்தோடு முதலாவது, இரண்டாவது தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளாதவர்களும் குறித்த நிலையங்களுக்கு சென்று தடுப்பூசியை பெற்றுக்கொள்ள முடியும் என சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
செய்தியாளர் கிஷோரன்