9 டொல்பின் மீன்களின் உடல்கள் அளம்பில் கடற்கரை பகுதியில் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கியமை தொடர்பில் பரிசோதனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் பிரதேச வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக அந்த திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சந்தன சூர்யபண்டார தெரிவித்தார்.
இதற்கமைய நீதிமன்றுக்கு சமர்ப்பணங்களை முன்வைத்து மரண பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
அத்துடன் இந்த விடயம் குறித்து கருத்துரைத்த வனஜீவராசிகள் திணைக்களத்தின் வட மாகாணத்திற்கு பொறுப்பான மிருக வைத்திய அதிகாரி பீ.ஸ்ரீதரன் உயிரிழந்த டொல்பின் மீன்களின் மாதிரிகள் அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்பப்படவுள்ளதாக தெரிவித்தார்.
2 முதல் 6 அடி நீளமுள்ள டொல்பின் மீன்களின் உடல்கள் இவ்வாறு கரையொதுங்கியுள்ளதோடு வட மாகாணத்தில் அதிகளவான டொல்பின் மீன்களின் உடல்கள் கரையொதுங்குகின்றமை இதுவே முதற்தடவை என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.