இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
இலங்கை தொல்பொருள் ஆய்வுப் பணிகளுக்காக சீனாவுடன் கைகோர்க்கிறது!!
china - srilanka
சீனாவின் தனியார் நிறுவனம் ஒன்றுடன் இன்று உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட உள்ளதாகத் தொல்பொருள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஆய்வுப் பணிகளுக்காக இலங்கையின் தொல்பொருட்களை சீனாவுக்கு அனுப்புவதற்கான இந்த உடன்படிக்கை (10) கைச்சாத்திடப்படவுள்ளது.
இந்த உடன்படிக்கைக்கு அமைய இலங்கையின் தொல்பொருள் ஆய்வுப் பணிகளுக்காக, சீனாவின் தொழில்நுட்ப ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ளப்பட உள்ளதாகத் தொல்பொருள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் அனுர மனதுங்க, இதனூடாக சீனாவின் தொழில்நுட்ப ஒத்துழைப்புடன், தொல்பொருள் ஆய்வு மற்றும் அகழ்வுப் பணிகளை மேற்கொள்ள சந்தர்ப்பம் கிடைப்பதாக குறிப்பிட்டுள்ளார்.