கட்டுமான கலைஞர்களிற்கான பயிற்சிப்பட்டறை நிகழ்வு அங்குரார்பணம் செய்யப்பட்டது.
ஐனாதிபதி,பிரதமரது நாட்டை கட்டியெழுப்பும் சௌபாக்கியத்தின் பார்வை எனும் நோக்குடன் திறன் அபிவிருத்தியுடன் கூடிய கட்டுமான கலைஞர்களுக்குரிய பயிற்சிபட்டறை (சிரமசிகுரு) அங்குரார்ப்பண வைபவம் வவுனியா NAITA அலுவலகத்திலும் ,வவுனியா பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்திலும் நேற்று நடைபெற்றது.
இப்பயிற்சி பட்டறையில் கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை மற்றும் கட்டிட பொருட்கள் தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் இந்திக அநுருத்த அவர்களின் இணைப்பாளர் எட்வேர்ட் கொஸ்டா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டதுடன் , வவுனியா மாவட்ட செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர்முகுந்தன் , கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் வவுனியா மாவட்ட இணைப்பாளர்
க. பத்மராசா , NAITA நிறுவனத்தின் வவுனியா மாவட்ட முகாமையாளர் சுபாஷ் மற்றும் பரிசோதகர்கு.சேரன், மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர் . கிருஷ்ணாந்தி பென்சிகர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இப்பயிற்சிப் பட்டறையில் வவுனியா மாவட்டத்தின் நான்கு பிரதேச செயலகங்களையும் சேர்ந்த இருநூறுக்கும் மேற்பட்ட இளைஞர் யுவதிகள் பயிலுனர்களாக கலந்து கொண்டு பயன்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் கிஷோரன்