“முடிந்தால் அரசிலிருந்து எங்கள் 14 பேரையும் வெளியேற்றிக்காட்டுங்கள். அவ்வாறு நடந்தால் அது அரசுக்கே ஆப்பாக மாறும்.”
- இவ்வாறு ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளரான இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:-
“மொட்டு கட்சியிலுள்ள சிலரே எம்மைக் கடுமையாக விமர்சிக்கின்றனர். முடிந்தால் எங்களை வெளியேற்றிக்காட்டுங்கள் என அவர்களுக்கு நாம் சவால் விடுக்கின்றோம். அதன்பின்னர் என்ன நடக்கும் என்பதை பாருங்கள்.
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்தவர்களுக்கு இன்றும் அக்கட்சி மீது பற்று உள்ளது. எனவே, தொடர் விமர்சனங்களை சகித்துக்கொள்ளமாட்டார்கள். நாம் 14 பேர் மட்டும் வெளியேறமாட்மோம். மஹிந்த அமரவீர கூறியதுபோல் நடக்கலாம்” – என்றார்.
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 14 பாராளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமல்ல, அரசிலிருந்து வெளியேறுவதாக இருந்தால் 50, 60 பேருடனேயே வெளியேறுவோம் என்று அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டிருந்தார் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.