இலங்கைசெய்திகள்

யாழ்.பிரபல பொருளியல் ஆசிரியை ஒய்வு பெறுகிறார்!!

Service Welfare Appreciation

யாழ்பாணம் மத்திய கல்லூரியின் ஆசிரியராக கடமையாற்றிவரும்
செல்வி புண்ணியமூர்த்தி தனலஷ்மி தனது 35 வருட கல்வி சேவையை நிறைவு செய்து தனது 60 வது வயதில் இன்று ஒய்வு பெறுகிறார் .


இதனையொட்டி, நேற்று காலை மத்திய கல்லூரியில் சேவை நலன் பாராட்டு விழா ஆசிரிய வட்டத்தின் ஏற்பாட்டில் சிறப்பாக இடம்பெற்றது .இதே நிகழ்வில் உயர்தர வர்த்தக துறையின் விசேட கௌரவிப்பு நிகழ்வும் இடம்பெற்றது


தனது கல்வி சேவையில் பல வர்த்தகத்துறை பட்டதாரிகளை உருவாக்கியுள்ளார் . குறிப்பாக வசதி குறைந்த மாணவர்களுக்கு அதிகளவு பொருளாதார உதவிகளையும் இலவச கல்வியையும் வழங்கிய பெருமைக்குரியவர்.


அத்துடன் 1997 தொடக்கம் தற்பொழுது வரை அரச பரீட்சை கடமையாளராக பல்வேறு வகிபாகங்களை வகித்தவர். அத்துடன் தொண்டைமானாறு வெளிக்கள நிலைய பரீட்சை க்கான வினாத்தாள் தயாரிப்பில் தொடர்ச்சியாக ஈடுபட்டவர். இதை விட கல்வி வெளியீட்டு திணைக்களத்தால் வெளியிடப்பட்ட சந்தைப் பொருளாதாரம் எனும் நூலுக்கு வெளிவாரி மதிப்பீட்டாளராக செயற்பட்டவர்.

அத்துடன் சாதாரண தர மாணவர்களுக்கான அபிவிருத்தி கல்வி எனும் நூலின் தமிழ் மொழிபெயர்ப்பை முதன் முதல் மேற்கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


இவர் தனது ஒய்வை முன்னிட்டு பாடசாலை இந்து கிறிஸ்தவ மன்றங்களுக்கு 60000 ரூபா அன்பளிப்பு செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது .
இவரது ஒய்வு பொருளியல் துறைக்கு ஒரு இழப்பு என தெரிவிக்கப்படுகிறது.

Related Articles

Leave a Reply

Back to top button