கம்பஹா மாவட்டத்தின் ஜா-எல நகர அபிவிருத்தியுடன் இணைந்ததாக கொழும்பு – நீர்கொழும்பு வீதியில் உள்ள ஜா-எல பாலத்தை விஸ்தரித்து அபிவிருத்தி செய்யும் பணி நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தலைமையில் இன்று (02) ஆரம்பிக்கப்பட்டது. இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சாஇ பாராளுமன்ற உறுப்பினர் நளின் பெர்னாண்டோ மற்றும் பிரதேசத்தின் அரசியல் மற்றும் அரச அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.இந்நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர்.
பாலத்தின் அகலப்படுத்தலுக்கு 214 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதுடன்இ வீதி அபிவிருத்தி அதிகாரசபை பாலத்தின் நிர்மாணப் பணிகளை மேற்பார்வை செய்யும்.தற்போது பயன்படுத்தப்படும் பாலத்தின் ஒருபுறம் 6 மீட்டர் வீதம் இருபக்கமும் 12 மீட்டரினால் அகலப்படுத்தப்படும் அதன்படி தற்போதுள்ள பாலம் 26 மீட்டராக விரிவுபடுத்தப்படும். இதன் மூலம் ஜா-எல நகரின் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு ஏற்படும்.
இந்த நிகழ்வின் பின்னர் கருத்துத் தெரிவித்த அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ.குருநாகல் – தம்புள்ளை வீதியில் கொஸ்கெலே வனபாதுகாப்பு பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களை அகற்றி வருவதாக ஊடகங்கள் வாயிலாக எம்மீது குற்றம் சுமத்தப்படுகிறது. அது அப்பட்டமான பொய்.இந்த அரசாங்கம் ரொட்டி சுட்டு வாழும் மக்களின் வயிற்றில் அடிக்கும் அரசாங்கமல்ல. கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் கொஸ்கெலே மட்டுமன்றி படகமுவஇ முகலான பகுதி வர்த்தகர்களையும் விரட்டியடித்தது. இன்று படகமுவ வர்த்தகர்கள் பஸ் நிலையத்திற்கு முன்பாக உள்ளனர். கடந்த ஆட்சியில் இவர்கள் ஈவிரக்கமின்றி விரட்டியடிக்கப்பட்டனர்.அத்தோடு நல்லாட்சி அரசாங்கம் அந்த வர்த்தகர்களுக்கு எதிராக நீதிமன்றம் சென்றது. அவர்களை வெளியேற்றுமாறு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆனால் அதனை நடைமுறைப்படுத்தாதிருக்க மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் தீர்மானம் எடுப்போம். மீண்டும் நீதிமன்றத்திற்கு சென்று தீர்ப்பை மீள் பரிசீலனை செய்யுமாறு கோர இருக்கிறோம். நீதிமன்றத்திற்குச் சென்று இது தொடர்பில் விளக்கமளிக்குமாறு வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளோம். அவர்கள் வெளியேற்றப்படுவதைத் தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்குமாறும் அறிவுறுத்தியுள்ளோம்.அவர்களை வெளியேற்ற வேண்டாம் என அறிவுறுத்தப்பட்ட போதிலும்இ இரண்டு நாட்களுக்கு முன்னர் அவர்களுக்கு வெளியேறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று அப்பாவி மக்களின் வர்த்தக நிலையங்களை உடைத்து அகற்றியுள்ளனர்.
பாதை அமைப்பதற்காக தமது கடைகளை அகற்றியதாக அந்த மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கொஸ்கெலை மற்றும் படகமுவ பகுதிகளில் உள்ள வர்த்தகர்களுக்கு நவீன கடைகளை வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த இருக்கிறோம். இத்திட்டத்தை நாங்கள் செயல்படுத்தும் போதேஇ கடந்த அரசு எடுத்த முடிவின்படி அத்திட்டத்தை நாசப்படுத்தும் வகையில் அவர்களின் கடைகள் உடைக்கப்பட்டன. இதற்கு கடந்த அரசாங்கமும் பொறுப்பேற்க வேண்டும். அதே போன்று கடந்த அரசாங்கத்திற்கு சார்பான அதிகாரிகளும் இதற்கு பொறுப்பேற்க வேண்டும். இது குறித்து உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் என்ற முறையில் கோரிக்கை விடுத்தேன். எங்கள் அரசாங்கமோ எமது ஜனாதிபதியோ பாதைகளை அமைப்பதற்காக ரொட்டி சுட்டு விற்கும் மக்களை துறத்த மாட்டோம் என்பதை மிகுந்த அன்புடனும் மரியாதையுடனும் நினைவுபடுத்துகிறேன். எனவே பொய்களை ஆட்சி செய்ய விடாதீர்கள். இந்த நாட்டு மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்துமாறு ஊடகங்களை கேட்டுக் கொள்கிறோம். என்று மேலும் தெரிவித்தார்.
செய்தியாளர் கிஷோரன்