கனிய எண்ணெய் கூட்டுத்தாபனம் கடந்த 10 மாதங்களாக நட்டத்திற்கு முகங்கொடுத்துள்ளதாக வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில இன்று நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.
எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்படாமை காரணமாகவே கூட்டுத்தாபனம் ஏழாயிரம் கோடி ரூபா நட்டத்திற்கு முகங்கொடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 6 மாதங்களுக்கான எரிபொருள் விலை சூத்திரம் முன்வைக்கப்படாமையே நட்டம் ஏற்பட்டமைக்கான காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.
விலை சூத்திரத்தை முன்வைக்க முடியாவிடின் வரிக்குறைப்பையாவது மேற்கொள்ளுமாறு நிதியமைச்சரை கோருவதாக அமைச்சர் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.