தமிழ் இனத்தின் அரசயல் தலைமைகளின் ஒற்றுமைக்கு சித்தார்த்தன் தலைமைதாங்கவேண்டும் என மாவை. சேனாதிராஜா அழைப்பு விடுத்துள்ளார்.
ஈ.பி ஆர் எல். எவ் கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், தமிழ் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் எம். கே. சிவாஜிலிங்கம், தமிழர் சமூக ஜனநாயக கட்சியின் செயலாளர் ஸ்ரீறிதரன், இலங்கை தமிழரசுக்கட்சியின் மூத்த தலைவர் சீ. வீ.கே. சிவஞானம் எனப்பல அரசியல் கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்திய கூட்டத்திலேயே அவர் இந்த அழைப்பை விடுத்தார்.
தழிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் பொதுச்செயலாளர் க. சதானந்தன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு யாழ்ப்பாணம் நாச்சிமார் கோயிலடி, சரஸ்வதி மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற போதே அவர் இந்த அழைப்பினை விடுத்தார்.
தமிழ் மக்கள் மிகப்பெரிய நெருக்கடி நிலைமைக்குள் சிக்கியுள்ளனர் , வரலாற்றில் என்றுமில்லாதவாறு நெருக்கடி காலமாக இன்றைய நிலைமை உள்ளது. ஒற்றுமைப்பட்ட தரப்பாக நாங்கள் இணைந்து வேலைசெய்யவேண்டும் எனப் பல காலமாகவே பேசப்பட்டு வருகிறது.
எந்த ஒரு விடயத்தையும் நிதானமாகவும் பொறுப்பாகவும் செயற்படுத்தி எல்லோருடனும் நட்புடன் பழகக்கூடிய தன்மை அவரிடம் உள்ளது. அதனால் இந்த ஒற்றுமை முயற்சியை சித்தார்த்தன் அவர்கள் தலைமைதாங்கி கொண்டுசெல்லவேண்டும் என வினயமாக கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
….