உலகம்செய்திகள்

இருவருக்கு ஓமிக்ரோன் (Omicron) தொற்று உறுதி!!

Omicron

புதிய கோவிட் மாறுபாடான ஓமிக்ரோன் (new variant Omicron) தொற்று பிரித்தானியாவில்  இருவருக்கு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார செயலாளர் தெரிவித்துள்ளார்.

ப்ரெண்ட்வுட், எசெக்ஸ் மற்றும் நொட்டிங்ஹாமில்  (Brentwood, Essex, and Nottingham) புதிய பிறள்வுகளை பிரித்தானிய  சுகாதார பாதுகாப்பு நிறுவனம் கண்டறிந்துள்ளதாக சஜித் ஜாவிட் குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் பிறள்வுகள் தென்னாப்பிரிக்காவிற்கு பயணம் செய்ததோடு தொடர்புடையவை என்றும், மேலும் சோதனைகள் மற்றும் தொடர்புத் தடமறிதல் நடைமுறைகள் தொடர்வதால்  அவர்களும் அவர்களது குடும்பத்தினரும் சுயமாக தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தப் புதிய மாறுபாடு அடையாளம், தென்னாப்பிரிக்கா, போட்ஸ்வானா, பெல்ஜியம், ஹொங்கொங் மற்றும் இஸ்ரேலிலும் ஏற்கனவே கண்டறியப்பட்டள்ளன.

இந்த நிலையில் பிரதம மந்திரி பொரிஸ் ஜோன்சன்  டவுனிங் வீதி வாசஸ்தலத்தில், அரசாங்கத்தின் தலைமை அறிவியல் ஆலோசகர் சர் பேட்ரிக் வாலன்ஸ் மற்றும் இங்கிலாந்தின் தலைமை மருத்துவ அதிகாரி பேராசிரியர் கிறிஸ் விட்டி (chief scientific advisor to the government, Sir Patrick Vallance, and the UK’s chief medical officer Prof Chris Whitty. )ஆகியோருடன் செய்தியாளர் சந்திப்பை நடத்தவுள்ளார். (இன்று சனிக்கிழமை 27ஆம் திகதி பிரித்தானிய நேரம் 5 மணிக்கு)

தென்னாப்பிரிக்காவில் புதிய ஓமிக்ரோன் மாறுபாடு ஏற்பட்டமை குறித்து உலக சுகாதார நிறுவனத்திற்கு கடந்த புதன்கிழமை அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் உலகெங்கிலும் உள்ள நாடுகள் தற்போது ஓமிக்ரோனின் பரவலைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் தென்னாப்பிரிக்க நாடுகளுடனான பயணத் தடைகள் மற்றும் கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்துவதில் ஈடுபட்டுள்ளன.

பத்து நாடுகள் தப்போது பிரித்தானியாவின் சிவப்பு பயண பட்டியலில் உள்ளன, இந்த நாடுகளில் இருந்து ஞாயிற்றுக்கிழமைக்கு பின் வரும் அனைவரும் 10 நாட்களுக்கு ஒரு விடுதியில்  தனிமைப்படுத்தப்பட வேண்டும்.

நேற்று வெள்ளிக்கிழமை (26.11.21) ,  தென்னாப்பிரிக்கா, நமீபியா, சிம்பாப்வே, பொட்ஸ்வானா, லெசோதோ மற்றும் எஸ்வதினி ஆகிய நாடுகளை பிரித்தானியா பட்டியலில் சேர்த்தது.

இன்று சனிக்கிழமையன்று (27.11.21) தனது அறிவிப்பில், அங்கோலா, மொசாம்பிக், மலாவி மற்றும் சாம்பியா ஆகிய நாடுகளும்  சேர்க்கப்படும் என சுகாதார செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button