‘அமெரிக்கர்கள் டென்மார்க் மற்றும் ஜேர்மனிக்கு பயணிக்க வேண்டாம்’ என்று அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் அறிவித்துள்ளது.
மேலும் இந்த இரு நாடுகளுக்கும் கொவிட் கால பயணத்தில் நான்காம் எண் எச்சரிக்கை நிலை கொடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்த இரு நாடுகளும் கொவிட் பரவலில் மிகவும் அபாயம் எனும் நிலையில் உள்ளது என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஜெர்மன் நாட்டுப் பிரதமர் ஏஞ்சலா மெர்கலால் கொவிட்டை கட்டுப்படுத்த போதிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை எனவும் தீவிர நடவடிக்கைகள் தேவைப்படுதாகவும் தெரிவித்துள்ளார்.