தேவையான பொருட்கள்:
- இட்லி அரிசி – 1/2 கப்
- புளி – 1 தேக்கரண்டி
- மஞ்சள் தூள் – 1/8 தேக்கரண்டி
- கடுகு – 1/2 தேக்கரண்டி
- உளுத்தம் பருப்பு – 1 தேக்கரண்டி
- கடலை பருப்பு – 1 தேக்கரண்டி
- மிளகாய் வற்றல் – 3 எண்ணம்
- நல்லெண்ணெய் – 3 தேக்கரண்டி
- பெருங்காயத்தூள் – சிறிது
- கருவேப்பில்லை – சிறிது
- உப்பு – தேவையான அளவு
செய்முறை :
- அரிசியைக் களைந்து 3 மணி நேரம் ஊறவைக்கவும்.
- புளியை 1/4 கப் வெந்நீரில் ஊற வைக்கவும்.
- அரிசி ஊறியதும், தண்ணீரை வடித்துவிட்டு, 1/2 கப் தண்ணீர் சேர்த்து விழுதாக அரைக்கவும்.
- ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் கடுகு சேர்த்து, வெடித்ததும் உளுந்து, கடலை பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயம், கருவேப்பிலை சேர்த்துத் தாளிக்கவும்.
- அதனுடன் உப்பு, மஞ்சள் தூள், ஒரு கப் தண்ணீர் சேர்த்துக் கலக்கவும்.
- ஊற வைத்தப் புளியைக் கரைத்து, 1/4 கப் தண்ணீர் சேர்க்கவும்.
- தண்ணீர் கொதிப்பதற்கு முன்பாக அரைத்த மாவு சேர்த்துக் கலந்து கிளறிக் கொண்டே இருக்கவும்.
- மாவு நிறம் மாறி கெட்டியானவுடன், மிதமான நெருப்பில் வைக்கவும்.
- பின்னர் அதனை மூடி வைத்து ஐந்து நிமிடம் வரை வேக வைக்கவும்.
- கடைசியாக 2 தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து இறக்கவும்.