எழுதியவர் – மணிசெல்வா
காதல் வழியும் ஆணின் கண்கள்
திமிர் தெறிக்கும் பெண்ணின் கண்கள்
பெருமிதம் பொங்கும் தாயின் கண்கள்
பாசம் மின்னும் தந்தையின் கண்கள்
திருப்தியுறாத ஓவியனின் கண்கள்
கண்ணாடியை ரசிக்காத நடிகனின் கண்கள்
சற்றே பேதலித்த கவிஞனின் கண்கள்
சிந்தனை ஊறிய அறிஞனின் கண்கள்
உறக்கம் தழுவும் முதியோரின் கண்கள்
பசியாறிய உழைப்பாளியின் கண்கள்
சிறுமை கண்டு பொங்கும் கண்கள்
சிரித்து மகிழும் நட்பின் கண்கள்
கண்டிப்பும் பரிவும் சமமாய்க் கலந்த
அறிவார்ந்த ஆசானின் கண்கள்
குற்றம் உணர்ந்து வருந்தும் கண்கள்
கருணையை உணர்ந்த பிராணியின் கண்கள்
பார்க்கப் பார்க்கக் கிறங்கடிக்கும்
குறும்பு கொப்பளிக்கும் மழலையின் கண்கள்
இறுதியாகஇ நிச்சயமாகஇ
இப்பதிவைப் பொறுமையுடன் படிக்கும் அன்புக்குரிய உங்களின் கண்கள்….
எனக்கு தெரிந்த கண்கள்…..