உணவுப் பஞ்சம் வடகொரியாவில் உச்சம் தொட்டுள்ள நிலையில் அந்நாட்டு மக்களுக்கு வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
வரக்கூடிய அறுவடையை வட கொரிய மக்கள் நம்பிக்கையுடன் எதிர்நோக்கி உள்ள நிலையில் அறுவடை மூலம் கிடைக்கும் ஒவ்வொரு அரிசியையும் சோளத்தையும் பத்திரமாக சேகரிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
மேலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வயல்களுக்கு அனுப்பப்படுகின்றனர். அறுவடையின்போது திருட்டுப் போனாலோ ஏமாற்றினாலோ கடுமையான தண்டனை விதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து டெய்லி என்.கே. பத்திரிகை ஆசிரியர் லீ சாங் யாங் கூறுகையில் ‘ வீதிகளில் அனாதைக் குழந்தைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. பட்டினியால் இறப்பது போன்ற பிரச்சினைகள் தொடர்கின்றன. அடித்தட்டு மக்கள் மென்மேலும் பாதிக்கப்பட்டுள்ளனர். உணவு பொருட்கள் பற்றாக்குறை எதிர்பார்த்ததை விட மோசமாக உள்ளது’ என்றார்.
அணுக்குண்டுகளை சோதித்து 2006ஆம் ஆண்டு முதல் உலக நாடுகளின் கடும் எதிர்ப்பையும் ஐ.நா பாதுகாப்புச் சபையின் விரோததத்தையும் சம்பாதித்துள்ள வடகொரியாவில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவுகிறது.
இதனிடையே கொரோனா வைரஸ் பெருந்தொற்றால் எல்லைகள் மூடப்பட்டுள்ளன. உணவுப்பொருட்கள் வினியோகச் சங்கிலி முறிபட்டுள்ளது. உணவுப்பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.