எமது நாட்டில் இடம்பெற்ற பெரும் அவமானமான செயல் – எஸ். இ. ரதன தேரர்
ஒரே நாடு ஒரே சட்டம் என்ற கருத்தை நடைமுறைப்படுத்துவதற்கு முன் நாட்டில் வாழ்வோர் ஒரே ஒரு இன மக்கள் மட்டுமல்ல என்பதை கண்டிப்பாக ஆட்சியாளர்கள் மனதில் கொள்ள வேண்டும் என எஸ். இ. ரதன தேரர் (S. E. Ratana Thera) தெரிவித்துள்ளார்.
தனது முகப்புத்தக பக்கத்தில் பதிவொன்றினை இட்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,
தன்னைப் பற்றி மட்டுமே நினைப்பது போன்ற செயற்பாடுகள் எமது நாட்டில் இடம்பெற்றது பெரும் அவமானமாகும்.
பல இனங்கள் வாழும் நாட்டிற்கு ஒரு குழு சட்டங்களை இயற்றுவது கேலிக்கூத்தாகும். சில முடிவுகளை ஒருமுறை அல்ல நூறு முறை பரிசீலிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை,ஒரே நாடு ஒரே சட்டம்’ என்ற தலைப்பில் ஜனாதிபதி செயலணி நேற்றைய தினம் ஸ்தாபிக்கப்பட்டிருந்தது.
கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையில் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளதுடன்,13 உறுப்பினர்களைக் கொண்டு இந்த செயலணி ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.