இன விடுதலை வேண்டி முள்ளிவாய்க்கால் நோக்கிய பயணம் என்னும் பேரணி இன்று (15) பொத்துவிலில் ஆரம்பமாகியது.
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்தை முன்னிட்டு பொத்துவில் தொடக்கம் முள்ளிவாய்க்கால் வரையான மக்கள் பேரணி இன்று பொத்துவிலில் ஆரம்பமாகியது.
இப்பேரணியில், உறவுகளை இழந்த உறவுகள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், மதகுருமார்கள், அரசியல்வாதிகள் பொதுமக்கள் எனப்பலர் கலந்து கொண்டர்.
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை தினமான மே – 18 இப்பேரணி முள்ளிவாய்க்காலை சென்றடையும் என்பது குறிப்பிடத்தக்கது.