இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கும், பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்வதற்கும் தயார் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ அறிவித்துள்ளார்.
நான்கு நிபந்தனைகளுடன் இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்குத் தயார் என சஜித் ஜனாதிபதிக்கு அவசர கடிதம் ஒன்றை இன்று (12) மதியம் அனுப்பி வைத்துள்ளார்.
அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுளள நிபந்தனைகளாக
- குறுகிய காலப்பகுதிக்குள் பதவி விலகுவதற்கு ஜனாதிபதி இணங்க வேண்டும்.
- இரு வாரங்களுக்குள் 19 ஆவது திருத்தச்சட்டம் மீள அமுலாகக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்க வேண்டும்.
- மக்களின் வாழ்வு இயல்பு நிலைக்கு திரும்பிய பின்னர், மேற்படி அரசமைப்பு திருத்தங்கள் அமுலானதும், நிலையான அரசாங்கமொன்றை ஸ்தாபிக்க பொதுத்தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
போன்றவையே நிபந்தனைகளாக குறிப்பிடப்பட்டுள்ளன.