புதிய நிதிஅமைச்சர் இராசமாணிக்கம் சாணக்கியனுக்கு வாழ்த்துக்கள் எனத் தெரிவித்து பதாகை ஒன்று மட்டக்களப்பு கல்லடிப்பாலத்திற்கு அருகில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இப்பதாகை நேற்றிரவு முதல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பதாகையில் வாழ்த்துபவர்கள் இலங்கை தமிழரசுகட்சி வாலிபர் முன்னணி எனப்பெயரிடப்பட்டுள்ளது.