இலங்கைசெய்திகள்

காணாமல் போன பெண் சடலமாக மீட்பு

இரண்டு நாட்களாக காணாமல் போயிருந்த இரண்டு பிள்ளைகளின் தயாரான 54 வயதுடைய எம்.ஆர். பஸீரா என்ற பெண் நேற்று (02) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பெரிய நீலாவணை மருதமுனையைச் சேர்ந்த பெண்ணொருவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் காணாமல் போயிருந்ததாக பெரிய நீலாவணை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.

இரண்டு நாட்களாக பொலிஸாரும், மக்களும் தேடுதல் நடவடிக்கையை மேற்க்கொண்டபோதும் பெண்ணை கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்நிலையில், 65 மீட்டர் வீடமைப்பு பகுதிக்குப் பின்புறமாகவுள்ள குளத்திலிருந்து நேற்று குறித்த பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. அத்துடன், மேலதிக விசாரணைகளை பெரியநீலாவணை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Back to top button